கேரள அரசை கண்டித்து வரும் 10ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் : தபெதிக

கோவை : சிறுவாணி அணையில் முழுமையாக தண்ணீரை தேக்காமல் வீணாக தண்ணீரை திறந்து விடும் கேரள அரசை கண்டித்து, வரும் 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.


கோவை : சிறுவாணி அணையில் முழுமையாக தண்ணீரை தேக்காமல் வீணாக தண்ணீரை திறந்து விடும் கேரள அரசை கண்டித்து, வரும் 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் முழு கொள்ளளவான 50 அடிக்கு தண்ணீரை கேரள அரசு தேக்கவிடுவதில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், கேரள அரசு சிறுவாணி அணையில் 42 அடி உயரத்திற்கு வந்ததும் தண்ணீரை வீணாக திறந்து விடுவதாகவும், அணையில் தண்ணீரை முழு கொள்ளவை எட்ட விடாமல், தண்ணீரை கேரள அரசு வீணாக்குவதால் கோவையில் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும், தமிழக மக்களை கேரள அரசு வஞ்சிக்கிறது எனவும் அவர் கூறினார்.

அதேபோல, கடந்தாண்டு 3 முறை சிறுவாணி அணை நிரப்பிய போதும், கேரளாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சிறுவாணி அணை பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்த அவர், கேரள அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் வருகின்ற 10ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...