நீலகிரி : இறந்தவைகளை மட்டும் தின்று, இருக்கும் உயிர்களை காக்கும் பாறு கழுகுகளை காக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என பாறு கழுகு பாதுகாப்பு குழு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்
நீலகிரி : இறந்தவைகளை மட்டும் தின்று, இருக்கும் உயிர்களை காக்கும் பாறு கழுகுகளை காக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என பாறு கழுகு பாதுகாப்பு குழு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயிரக்கணக்கில் வனங்களில் வாழ்ந்து வந்த பாறுகழுகுகளின் எண்ணிக்கை தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் வனங்களில் புலி சிறுத்தை ஆகிய வனவிலங்குகள் கால்நடைகளை கொன்று விடுவதும், கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்படும் போது நச்சுத்தன்மை உள்ள மருந்துகளை செலுத்துவதால், இந்த பாறு கழுகுகள் அதை உண்டு இறக்கும் நிலை ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாயார், மசினகுடி பகுதியில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் உயிர் வாழ்கின்ற பாறு கழுகுகள் மீண்டும் உயிர் வாழ மத்திய மாநில அரசுகள் அதற்குண்டான பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என பாறு கழுகுகள் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாரதிதாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வனத்துறை சார்பாக பாறு கழுகுகள் பாதுகாக்கும் குழு இருந்து வரும் நிலையில், சரியான முறையில் தங்கள் பணியினை கடைப்பிடிப்பதன் மூலம் மீண்டும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாக கூடும் என்று கூறினார்.