கோவை : கோவை நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ராம்குமாரின் உடல் 3 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு துறையினரால் சித்திரைச்சாவடி அணை அருகே மீட்கப்பட்டுள்ளது.

கோவை போளுவாம்பட்டியில் கடந்த 4ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்பின் போது ராம்குமார் என்ற இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தொடர்ந்து தீவிரமாக ராம்குமாரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று ராம்குமாரின் உடலை சித்திரைச்சாவடி அணை அருகே தீயணைப்பு துறையினர் கண்டெடுத்தனர். அதேபோல ராம்குமாரின் சகோதரர் மணிகண்டனும் மாயமானதை அடுத்து, அவரும் நீருக்குள் மூழ்கி இருப்பாரா என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.