கோவை : டாடாபாத் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை பெற்றோருடன் காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் உத்தரவிட்டனர்.

கோவை காந்திபுரம் அருகே உள்ள டாடாபாத் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வருபவர் மோகன் தாஸ். இந்த நிலையில் வணிக வளாகத்திற்கு நேற்று இரவு தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மோகன்தாஸ் மாநகர காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காட்டூர் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த மிரட்டல் பொய் என்பதும் இதை ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் செய்துள்ளதும் தெரியவந்தது.
அதேபோல, சிறுவன் தனது பள்ளி நண்பர்களிடம் விளையாட்டாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்க எண்ணி டயல் செய்த போது தவறுதலாக கோவை வணிகவளாக உரிமையாளருக்கு அழைப்பு வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து காட்டூர் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை அழைத்துக் கொண்டு கோவை காட்டூர் காவல்நிலையத்தில் ஆஜராகும் மாறு பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இவர்கள் நேரில் ஆஜரானவுடன் இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.