நீலகிரி : நீலகிரியை அடுத்த கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி : நீலகிரியை அடுத்த கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு அருகே வங்கி, பள்ளி ,அரசு அலுவலகம், நியாய விலை கடை செயல்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கூறி போராட்டம் நடத்தப்பட்டதால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிகமாக கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என உறுதி அளித்த நிலையில், இன்று திடீரென டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்க காரில் மது பாட்டிலை கொண்டு வந்துள்ளனர். தகவலறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க விடாமல் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி போலீசார், டாஸ்மாக் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும், டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்ற பொதுமக்கள், டாஸ்மாக் கடை மீண்டும் வந்தால் பள்ளி மாணவர்களுடன் போராட்டம் நடத்த உள்ளதாக கூறினர்.