விநாயகர் சிலை கரைத்த இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட விவகாரம்; உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

கோவை : கோவை மாவட்டம் போலுவம்பட்டிஅருகே விநாயகர் சிலை கரைத்த போது இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அந்த இளைஞரின் உடல் இன்னும் கிடைக்காததையடுத்து அவரின் உறவினர்கள் ஆலாந்துறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை : கோவை மாவட்டம் போலுவம்பட்டிஅருகே விநாயகர் சிலை கரைத்த போது இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அந்த இளைஞரின் உடல் இன்னும் கிடைக்காததையடுத்து அவரின் உறவினர்கள் ஆலாந்துறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு குறிப்பிட்ட குளங்களில் கரைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விராலியூர் ஊர் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 4 அடி விநாயகர் சிலை ஆலாந்துறை அருகே உள்ள இக்கரை போலுவம்பட்டி நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்டது.

அப்போது நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்த நிலையில் சிலையை கரைக்க சென்ற ராமு என்ற 21 வயது இளைஞர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்ட மக்கள் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நேற்று இரவுவரை இளைஞரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது. மீண்டும் இன்று காலை முதல் இளைஞரின் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இளைஞரின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.



இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இளைஞரின் உடலை மீட்க ஏற்படும் காலதாமதத்தை கண்டித்து ஆலாந்துறை அருகே அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆலாந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...