வாழ் நாள் முழுவதும் உத்தரவாத பென்சன் தரும் ஜீவன் சாந்தி திட்டத்தில் ரூ.114.83 கோடிக்கு புது வணிகம் : எல்.ஐ.சி கோவை கோட்ட மேலாளர்

கோவை : வாழ் நாள் முழுவதும் உத்தரவாத பென்சன் தரும் ஜீவன் சாந்தி திட்டத்தில் 114.83 கோடி ரூபாய்க்கு புது வணிகம் செய்யப்பட்டு உள்ளதாக எல்.ஐ.சி கோவை கோட்ட மேலாளர் நிக்கல்சன் தெரிவித்தார்.

கோவை : வாழ் நாள் முழுவதும் உத்தரவாத பென்சன் தரும் ஜீவன் சாந்தி திட்டத்தில் 114.83 கோடி ரூபாய்க்கு  புது வணிகம் செய்யப்பட்டு உள்ளதாக எல்.ஐ.சி கோவை கோட்ட மேலாளர் நிக்கல்சன் தெரிவித்தார்.

எல்.ஐ.சி ஆப் இந்தியாவின் 63ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி சாலையில் உள்ள அலுவலகத்தில் 63ம் ஆண்டு நிறைவையொட்டி போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை எல்.ஐ.சி கோவை கோட்ட மேலாளர் நிக்கல்சன் வெளியிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 1 முதல் 7 வரை இன்சூரன்ஸ் வார விழாவாக கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார். 1956ல் 5 கோடி முதலீட்டில் துவங்கப்பட்ட எல்.ஐ.சி பொதுதுறை நிறுவனம் தற்போது 31.11 இலட்சம் கோடியுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது எனவும் 

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற வகையில் பல்வேறு விதமான பாலிசிகள் மூலம் பயன் பெற்று வருவதாக தெரிவித்தார். 

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் எல்.ஐ.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும் 26 கிளைகள், 20 துணை அலுவலகங்கள், 22 மினி அலுவலகங்கள்,1235 ஊழியர்கள், 11855 முகவர்களுடன் சேவையாற்றி வருவதாக தெரிவித்தார். மேலும், வரும் 2019-2020ம் ஆண்டு இலக்கு 1,92,000 பாலிசிகளும், 549 கோடி முதல் பிரீமியமும் வருவாய் என நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக கூறினார். வாழ்நாள் முழுவதும் உத்தரவாத பென்சன் தரும் ஜீவன் சாந்தி திட்டத்தில் மட்டும் 114.83 கோடி புது வணிகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...