திருப்பூரில் பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற வாலிபர் : சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் கடைக்கு முன் நின்ற இரு சக்கர வாகனத்தை வாலிபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர் : திருப்பூரில் கடைக்கு முன் நின்ற இரு சக்கர வாகனத்தை வாலிபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர் குமரன் சாலையில் தனியார் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் மணிமாறன். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை 8 மணி அளவில் தன் கடையை திறப்பதற்காக வந்து வண்டியை வெளியே சாவியுடன் நிறுத்திவிட்டு கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியே செல்போனில் பேசியபடி சென்ற இளைஞர் ஒருவர் சாவியுடன் வண்டி நிற்பதைப் பார்த்து, திரும்ப வந்து வண்டியை அவசர அவசரமாக எடுத்துச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து மணிமாறன் கொடுத்த புகாரையடுத்து சிசிடிவி காட்சி ஆதாரங்களைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...