கோவை : தமிழ் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்த தமிழ் பெண்ணுக்கு ஆளுநர் பதவி கொடுத்ததை விமர்சனம் செய்வது தவறு என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவை பெரியகடை விதியில் தனியார் கவரிங் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, சரத்குமார் பேசுகையில், “வாழ்க்கையில் பல வெற்றி, தோல்விகளை சந்தித்த தமிழிசைக்கு உயர் பதவி கொடுத்ததற்கு தமிழனாக மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு கட்சியில் உயர் பதவி கொடுக்கவில்லை என்பது குறித்து நான் பேச முடியாது. அதேபோல், பா.ஜ.க.வின் கொள்கைகள் பற்றியும், கோட்பாடுகள் பற்றியும் நான் பேசமுடியாது,” என சரத்குமார் தெரிவித்தார்.
“பாரம்பரிய குடும்பத்தில் வந்த தமிழ் பெண்ணுக்கு ஆளுநர் பதவி கொடுத்ததைக் விமர்சனம் செய்வது தவறு. அவருக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. அதை ஒட்டு மொத்த தமிழகமே வரவேற்கிறது,” என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.