தமிழிசைக்கு ஆளுநர் பதவி கொடுத்த விவகாரம் : சரத்குமார், எஸ்.பி. வேலுமணி ஆதரவு

கோவை : தமிழ் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்த தமிழ் பெண்ணுக்கு ஆளுநர் பதவி கொடுத்ததை விமர்சனம் செய்வது தவறு என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.


கோவை : தமிழ் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்த தமிழ் பெண்ணுக்கு ஆளுநர் பதவி கொடுத்ததை விமர்சனம் செய்வது தவறு என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.



கோவை பெரியகடை விதியில் தனியார் கவரிங் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தனர். 



அப்போது, சரத்குமார் பேசுகையில், “வாழ்க்கையில் பல வெற்றி, தோல்விகளை சந்தித்த தமிழிசைக்கு உயர் பதவி கொடுத்ததற்கு தமிழனாக மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு கட்சியில் உயர் பதவி கொடுக்கவில்லை என்பது குறித்து நான் பேச முடியாது. அதேபோல், பா.ஜ.க.வின் கொள்கைகள் பற்றியும், கோட்பாடுகள் பற்றியும் நான் பேசமுடியாது,” என சரத்குமார் தெரிவித்தார்.

“பாரம்பரிய குடும்பத்தில் வந்த தமிழ் பெண்ணுக்கு ஆளுநர் பதவி கொடுத்ததைக் விமர்சனம் செய்வது தவறு. அவருக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. அதை ஒட்டு மொத்த தமிழகமே வரவேற்கிறது,” என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...