பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை : பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோவை : பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ‘பிளாஸ்டிக்கை ஒழிப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி நின்று விழிப்புணர்வு மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல், ‘பிளாஸ்டிக் இல்லா நகரம் அமைப்போம், நம் வாழ்வில் இந்த நிமிடம் முதல் எல்லா நிகழ்வுகளிலும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்,’ என்று தங்கள் கைகளில் மை தடவி துணி பதாகைகளில் பூசி சபதம் எடுத்துக் கொண்டனர்.



இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை தாங்கினார். அவர் அனைவருக்கும் துணிகளைக் கொடுத்து, எழுதுகிற பேனாவிலிருந்து நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...