கோவை : பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியும் இணைந்து, 65 அடி உயரம், 33 அடி அகலத்தில் சணல் பை தயாரித்து புதிய உலக சாதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை : பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியும் இணைந்து, 65 அடி உயரம், 33 அடி அகலத்தில் சணல் பை தயாரித்து புதிய உலக சாதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சணல் பையை உருவாக்குவதில், கண்பார்வையற்றோர் மற்றும் திருநங்கையர்கள் ஈடுபட்டனர். சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனின் மற்றுமொரு சாதனையை மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி நிறுவனம் அதன் நிர்வாகமும் இணைந்து நிகழ்த்தியுள்ளன. இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர போலீஸ் துணை ஆணையர் (சட்டம் - ஒழுங்கு) எல். பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் எம்.கே. காந்தி, சந்திரன்ஸ் யுவ பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் சி.சிவநேசன், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.சசிகலா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர், சந்திரன்ஸ் யுவ பவுண்டேஷன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.சசிகலா பேசுகையில், 'பிளாஸ்டிக் வேண்டாம், பசுமையை நோக்கி செல்வோம்’ ‘சுற்றுச் சூழலுக்கு நட்பாய் இருப்போம்‘ போன்றவை வலியுறுத்தப்பட்டன. சமுதாய பொறுப்பின் ஒரு பகுதியாக, இது அமைந்தது. 65 அடி உயரமுள்ள இந்த சணல் பை, 33 அடி அகலம் கொண்டது. சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனை சேர்ந்த 9 பார்வையற்றோர் 5 மணி நேரத்தில் உருவாக்கினர். இந்த மிகப்பெரிய சணல் பையை உருவாக்குவதில் கின்னஸ் உலக சாதனை புரிய மேற்கொண்ட அரிய முயற்சியாகும். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் பணியாளர்கள், மாணவர்கள் இதில் பங்கேற்று உதவினர். இந்த பை, அறிமுக நாளில் பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது," என்றார்.