8 மணிநேர சிகிச்சை போராட்டத்திற்குப் பிறகு கோவையில் பெண் யானை பலி : தடாகத்தில் ஓராண்டில் 3 யானைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

கோவை : கோவை மாவட்டம் மாங்கரை அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை, 8 மணிநேர சிகிச்சைப் போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவை மாவட்டம் மாங்கரை அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை, 8 மணிநேர சிகிச்சைப் போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை - ஆனைகட்டி சாலையில் உள்ள மாங்கரை பகுதியில் இன்று அதிகாலை குட்டியுடன் வலம் வந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் விரைந்து வந்து குட்டியை வனப்பகுதிக்குள் விரட்டியடித்து விட்டு, பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். தொடர்ந்து, 8 மணி நேரத்திற்கு மேலாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. வாழைப்பழம், கால்சியம் உணவுகள் அனைத்தும் கொடுக்கப்பட்டன. இருப்பினும், அதன் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, மாலை 5.30 மணியளவில் பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.



"இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் பெண் யானை பாதிக்கப்பட்டிருந்தது. 8 மணி நேரத்திற்கும் மேலாக முடிந்தவரை சிகிச்சை அளித்து போராடினோம். ஆனால், எந்தப் பயனும் அளிக்கவில்லை," என்றார் கோவை மாவட்ட ரேஞ்சர் சுரேஷ்.

இதன் மூலம், இந்த ஆண்டில் தடாகம் பகுதியில் மட்டும் 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...