கோவை : ஈச்சனாரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி மாணவர், சக மாணவர்கள் முன்னிலையில் கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : ஈச்சனாரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி மாணவர், சக மாணவர்கள் முன்னிலையில் கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் பூங்காநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷின் மகன் விஷ்ணு (19). இவர் ஈச்சனாரி அருகே உள்ள கற்பகம் கல்லூரியில் இளங்கலையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடலில் ஏதோ குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவர் சுமார் 15 நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை. இப்படியிருக்க மாணவர் விஷ்ணு இன்று கல்லூரிக்கு சென்ற நிலையில், ஆசிரியர்கள் விடுமுறை குறித்து விளக்கம் கேட்டதாகவும், பெற்றோரை வரவழைக்க சொல்லியதாகவும் மாணவர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், விஷ்ணு முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பு துவங்கும் முன் ஆசிரியர் வருவதற்குள் வகுப்பை விட்டு வெளியே வந்தார். இவர் திடீரென கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்தது. பின்னர், தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார், உயிரிழந்த மாணவன் விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தரப்பினர் ஆசிரியர் தரப்பினர் உறவினர்கள் என பலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில், கல்லூரியில் வைத்து மாணவர் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவ, மாணவியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.