கோவை : கோவை புறநகரில் உள்ள காரமடையில் முதல்முறையாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் அகாடமி பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் ராசாமனி இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு தரமான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வகையில், கோவை புறநகரில் முதல் முறையாக கிரிக்கெட் பயிற்சி அகாடமி இன்று துவக்கபட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் ஜ.பி.எல். மற்றும் டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்களான ராஜகோபால் சதீஷ், அருண் கார்த்திக் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் ராசாமணி கிரிக்கெட் விளையாடி அகாடமி பயிற்சியை துவக்கி வைத்தார். மேலும், இதே பள்ளியில் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், துப்பாக்கி பயிற்சி உள் விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. அதனையும் அவர் பார்வையிட்டார்.
இந்த முகாமில் திறைமக்கு ஏற்றவாறு பேட்டிங்,பவுலிங்,பீல்டிங் பயிற்சியினை விளையாட்டில் ஏற்படுகிற மனஅழுத்தத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சி உணவுக்கட்டுப்பாடு ஓய்வு மற்றும் களைப்பு நீங்கப்பெறுதலுக்கான பயிற்சி உள்ளிட்டவை பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்களாக இருக்கும், மேலும் இளம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் திறமைகளை கண்டறிந்து அதனை மேம்படுத்தி வெளிக்கொணர்ந்து தலைசிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்றுவதே அகாடமியின் குறிக்கோளாக ஆகும் என்றும்,இந்த பயிற்சி முகாமின் வாயிலாக கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களின் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்கிட விரும்புவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி.ஆணையாளர் கோவிந்தராஜ், வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் அறங்காவலர் டாக்டர் குணசேகரன் தாளாளர் சிங்காரவேல், இயக்குநர் சுரேஷ்குமார்,ராஜூ, முதல்வர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.