கோவையில் பேருந்தில் நூதன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது : திருடப்பட்ட 928 கிராம் தங்க நகைகள் கட்டிகளாக மீட்பு

கோவை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேருந்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த நபர், கோவையில் பேருந்துக்குள் வைத்து நூதனமாக திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேருந்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த நபர், கோவையில் பேருந்துக்குள் வைத்து நூதனமாக  திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை ராஜவீதியில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் அபினய் (41). இவரது நகைப்பட்டறையில் ரவிச்சந்திரன் (55) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் கோவையில் இருந்து சேலத்துக்கு 936 கிராம் நகைகளை தனது பையில் வைத்து சென்றுள்ளார். பின்பு பணிகள் முடிந்து அன்றே மீண்டும் கோவை நோக்கி பேருந்தில் வந்துள்ளார். பேருந்தில் வரும்போது சந்தேகத்துக்குரிய நபர்களின் நடவடிக்கையால் சின்னியம்பாளையம் அருகே தனது பையை சோதனை செய்தார். அப்போது, அதிலிருந்த நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, ரவிச்சந்திரன் தனது உரிமையாளர் அபினய்யிடம் நகைகள் காணாமல் போனது தொடர்பாக தகவல் அளித்தார். பின்னர், உரிமையாளர் அபினய் அளித்த புகாரின் பேரில் பீளமேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவின் பேரில், ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சிவகங்கையைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் தலைமையிலான திருட்டு கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டதும், இவர்கள் நூதனமாக ஒடும் பேருந்தில் 1 ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டு பயணிகளின் கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இப்படியிருக்க கோவையில் பேருந்தில் திருடப்பட்ட நகைகளை தங்க கட்டிகளாக மாற்றி மீண்டும் கோவைக்கு அந்த கும்பல் விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் மலைச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 928 கிராம் தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் மலைச்சாமியுடன் சீனிவாசபாண்டியன், வீரபாண்டி, பாலமுருகன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...