கோவையில் உறுதிமொழியை மீறிய இரட்டையர்களுக்கு 355 நாட்கள் சிறை தண்டனை

கோவை : தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு உறுதிமொழியை மீறிய இரட்டையர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் 355 நாட்கள் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை : தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு உறுதிமொழியை மீறிய இரட்டையர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் 355 நாட்கள் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகரில் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், துணிகர கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், போதைப் பொருட்களை இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தொடர்ந்து, தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகள் குறித்த விவரங்களை சேகரித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார். இந்த அடிப்படையில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 300-க்கும் மேற்பட்டவர்களை கண்காணித்து அவர்களிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 இன் கீழ் எழுத்துப்பூர்வமாக இனிமேல் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குறுதிகளை மீறும் நபர்களை ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை வைக்க எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்ட்ரேட் என்ற அடிப்படையில் மாநகர காவல் துணை ஆணையாளருக்கு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில், கடந்த மே மாதம் 29-ம்தேதி புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆவி வினோத் என்பவர் உறுதி மொழியை மீறியதாக, கோவையில் முதன்முறையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110-ன்கீழ் 313 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மீண்டும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உறுதிமொழியை மீறிய இருவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 இன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (23)மற்றும் சுரேஷ்(23). இந்த இரட்டையர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 16 வழக்குகள் இருக்கின்றன. இப்படியிருக்க இவர்கள் இனிமேல் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி அளித்து இருந்தனர். ஆனால், உறுதி மொழியை மீறி இவர்கள் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, சகோதரர்கள் இருவரையும் 355 நாட்கள் சிறையில் அடைக்க சிறப்பு அதிகாரத்தின் கீழ் கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் உத்திரவிட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...