கோவை : வறட்சியால் வறண்டு கிடந்த மேய்ச்சல் நிலங்கள், தற்போது பருவமழைக்கு பின் பசுமையாக மாறியுள்ளதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் புறநகர் பகுதிகளான சிறுமுகை, காரமடை மற்றும் கிராம பகுதிகளான பள்ளேப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துரை, தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. விவசாயத்தின் உப தொழிலாக உள்ள ஆடு, மாடு வளர்ப்பில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி காரணமாக மேய்ச்சல் நிலங்கள் முழுவதும் பொட்டல் காடுகளாக மாறின. இதனால், கால்நடைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதுடன், அதனை மேய்க்க முடியாமல் கால்நடை வளர்ப்போர் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை உருவானது. மேலும், பெத்திகுட்டை, சித்தன்குட்டை, டேம்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை உனவிற்காக ஆபத்தையும் பொருட்படுத்தாமல், பவானி ஆற்றினை பரிசல் மூலம் கடந்து ஆடுகளை கொண்டு சென்று மேய்த்து வந்தனர்.

இந்த நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது தாமதமாக துவங்கிய போதும், பின்னர் மேற்கு தொடர்ச்சியின் அடிவாரப் பகுதியாக உள்ள மேட்டுப்பாளையத்தில் நல்ல மழை பெய்தது. மழை பெய்து இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில், தற்போது காய்ந்து கிடந்த மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் தற்போது பசுமைக்கு திரும்பியுள்ளன. மேய்ச்சல் நிலங்களில் சுமார் ஒரு அடிக்கும் மேல் புட்கள் துளிர்விட்டு நன்கு வளர்ந்து வருவதால், கால்நடைகளுக்கான உணவு தட்டுப்பாடு இன்றி அடுத்த பருவமழை வரை இருக்கும். எனவே, இந்த பருவமழையால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பருவமழைக்கு பின் கால்நடைகளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளதால், அதன் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.