மின்‌ கட்டணத்தை டெபிட்‌ கார்டு மூலம்‌ பெற கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் கோரிக்கை

கோவை : மின் கட்டணங்களை டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழக மின்சார வாரியத்திற்கு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை : மின் கட்டணங்களை டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழக மின்சார வாரியத்திற்கு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில்‌ சுமார்‌ 2 கோடிக்கும்‌ மேற்பட்ட மின்‌ இணைப்புகள்‌ உள்ளன. இதில்,‌ தாழ்வழுத்த மின்‌ இணைப்புகள்‌, தொழிற்சாலை மின்‌ இணைப்பு, வர்த்தக மின்‌ இணைப்பு என பல வகையான மின்‌ இணைப்புகள்‌ உள்ளன. அவற்றில், அதிகமாக மின்‌ கட்டணம்‌ செலுத்துபவர்கள்‌ காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாகவே மின்‌ கட்டணம்‌ செலுத்த முடியும்.‌ குறிப்பாக, ரூ. 2,000-க்கு மேல்‌ மின்‌ கட்டணம்‌ செலுத்த வேண்டுமென்றால்,‌ பணமாக செலுத்த முடியாது. காசோலை மூலமாகவோ அல்லது வங்கி வரைவோலை மூலமாகதான்‌ செலுத்த முடியும்.‌ மின்வாரிய அலுவலகத்தில்‌ நாள்தோறும்‌ வசூலிக்கப்படும்‌ தொகைகளை வங்கிக்கு கொண்டு சென்று செலுத்துவதில்‌ பல்வேறு சிரமங்களை கருத்தில்‌ கொண்டு, மின்வாரியம்‌ கடந்த ஆண்டு காசோலை அல்லது வரைவோலை மூலமாக செலுத்த வேண்டும்‌ என அறிவித்தது. இதனால்,‌ தொழிற்சாலை மற்றும்‌ வர்த்தக நிறுவனாங்கள்‌ வங்கியில்‌ வரைவோலை மூலம்‌ செலுத்தி வருகின்றனர்.‌ இதில்,‌ வங்கி குறிப்பிட்ட தொகை வகலித்துக்கொள்கிறது. ஆனால்,‌ அடுக்குமாடி குடியிருப்பு அல்லது ஒன்றுக்கும்‌ மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ள உரிமையாளர்கள்‌ வங்கி காசோலை மூலம்‌ செலுத்துவதில்‌ சிரமம்‌ உள்ளதாக தெரிவிக்கின்றனர்‌.

இது குறித்து கோவை கன்ஸ்யூமர்‌ வாய்ஸ்‌ செயலர்‌ நா.லோகு கூறியதாவது :-‌ தற்பொழுது டிஜிட்டல்‌ இந்தியா என்ற வகையில்‌ வங்கி காசோலை மற்றும்‌ வரைவோலை மூலமாக பணபரிவர்த்தனைகள்‌ படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும்,‌ வங்கிகள்‌ காசோலை மூலமான பண பரிவர்த்தனையை குறைக்கும்‌ நடவடிக்கையில்‌ ஈடுபட்டுள்ளன. மேலும்,‌ ஒவ்வொரு வங்கியிலும்‌ காசோலை புத்தகம்‌ பெறுவதற்கு ஒரே மாதிரியான கட்டணம்‌ வசூலிக்காமல்,‌ அதிக கட்டணம்‌ பிடித்தம்‌ செய்து கொள்கின்றனர்.‌ மேலும்,‌ வங்கி வரைவோலைக்கான கமிசன்‌ தொகையும்‌ அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால்,‌ பொதுமக்களுக்கு மிகவும்‌ சிரமம்‌ ஏற்படுகிறது. தற்பொழுது, சாதாரண பேக்கரி முதல்‌ அனைத்து வர்த்தகத்திற்கும்‌ வங்கி டெபிட்‌ கார்டு அல்லது கடன்‌ அட்டை மூலம்‌ பணம்‌ செலுத்தும்‌ வசதிகள்‌ உள்ளது. அதுபோல, சமையல்‌ எரிவாயுவிற்கான கட்டணமும்‌ டெபிட்‌ கார்டு மூலம்‌ செலுத்தும்‌ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்,‌ மின்வாரியத்தில்‌ மட்டும்‌ மின்கட்டணத்தை பிரிவு அலுவலகத்தில்‌ ரொக்கமாக செலுத்தும்‌ நிலை உள்ளது. பெரும்பாலும்‌ மின்‌ கட்டணம்‌ செலுத்துவதற்கு பெண்கள்‌ சென்று வருவதால்,‌ டெபிட்‌ கார்டு மூலம்‌ பணம்‌ செலுத்தும்‌ வசதியை மின்‌ வாரியம்‌ நடைமுறைபடுத்த வேண்டும்,‌ என்றார்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...