கோவை : மின் கட்டணங்களை டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழக மின்சார வாரியத்திற்கு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இதில், தாழ்வழுத்த மின் இணைப்புகள், தொழிற்சாலை மின் இணைப்பு, வர்த்தக மின் இணைப்பு என பல வகையான மின் இணைப்புகள் உள்ளன. அவற்றில், அதிகமாக மின் கட்டணம் செலுத்துபவர்கள் காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாகவே மின் கட்டணம் செலுத்த முடியும். குறிப்பாக, ரூ. 2,000-க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், பணமாக செலுத்த முடியாது. காசோலை மூலமாகவோ அல்லது வங்கி வரைவோலை மூலமாகதான் செலுத்த முடியும். மின்வாரிய அலுவலகத்தில் நாள்தோறும் வசூலிக்கப்படும் தொகைகளை வங்கிக்கு கொண்டு சென்று செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு, மின்வாரியம் கடந்த ஆண்டு காசோலை அல்லது வரைவோலை மூலமாக செலுத்த வேண்டும் என அறிவித்தது. இதனால், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனாங்கள் வங்கியில் வரைவோலை மூலம் செலுத்தி வருகின்றனர். இதில், வங்கி குறிப்பிட்ட தொகை வகலித்துக்கொள்கிறது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ள உரிமையாளர்கள் வங்கி காசோலை மூலம் செலுத்துவதில் சிரமம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் நா.லோகு கூறியதாவது :- தற்பொழுது டிஜிட்டல் இந்தியா என்ற வகையில் வங்கி காசோலை மற்றும் வரைவோலை மூலமாக பணபரிவர்த்தனைகள் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், வங்கிகள் காசோலை மூலமான பண பரிவர்த்தனையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு வங்கியிலும் காசோலை புத்தகம் பெறுவதற்கு ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்காமல், அதிக கட்டணம் பிடித்தம் செய்து கொள்கின்றனர். மேலும், வங்கி வரைவோலைக்கான கமிசன் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. தற்பொழுது, சாதாரண பேக்கரி முதல் அனைத்து வர்த்தகத்திற்கும் வங்கி டெபிட் கார்டு அல்லது கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளது. அதுபோல, சமையல் எரிவாயுவிற்கான கட்டணமும் டெபிட் கார்டு மூலம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மின்வாரியத்தில் மட்டும் மின்கட்டணத்தை பிரிவு அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்தும் நிலை உள்ளது. பெரும்பாலும் மின் கட்டணம் செலுத்துவதற்கு பெண்கள் சென்று வருவதால், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியை மின் வாரியம் நடைமுறைபடுத்த வேண்டும், என்றார்.