கோவை : தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி வரும் 29-ம் தேதி கோவை கொடிசியாவில் நடக்கிறது.

வரும் 29-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நடக்கும் இந்த கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது :- பல்வேறு மாநிலங்களில் இருந்து 160 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றன. 1200 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில், 8ம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர்கல்வி படிப்பவர்கள் வரை பயிலும் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். இதன் மூலம் மாணவர்களின் படைப்பாக்க திறனை வெளிக்கொணர முடியும். கண்காட்சி மூலம் தொழில்முனைவோரின் பயனுள்ள தொடர்பு மாணவர்களுக்கு கிடைக்கும். கண்காட்சியை பார்வையிட கட்டணம் இல்லை. தமிழக அரசின் அறிவியல் தொழில்நுட்ப குழு தலைவர் மயில்சாமி அண்ணாதுரை இந்த கண்காட்சியை துவக்கி வைக்கிறார், எனக் கூறினர்.