கோவை : வனவிலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் மலை அடிவார பகுதிகளான தோலம்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துரை, வெள்ளியங்காடு, லிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வாழை, தென்னை போன்ற பயிர்களை காட்டுயானைகள் சேதப்படுத்தி வரும் நிலையில், சோளம், தட்டை, அவரை போன்ற தானிய பயிர்களை உற்பத்தி செய்தால், அதனை மான், மயில், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் நாசம் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வனவிலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி காரமடையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதுடன், பெருகி வரும் காட்டு பன்றிகள், மயில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோசங்கள் எழுப்பட்டன.
மேலும், கூடலூர், நாயக்கன்பாளையம் பகுதிகளில் யானைகள் ஊடுருவல் அதிகரித்து வரும் சூழலில், அங்கு விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கூடலூர் மற்றும் நாயக்கன்பாளையத்தை யானைகளின் வாழ்விடம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன், அறிவிப்பை அரசு வாபஸ் வாங்கவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.