தடுப்பணைகளை சீரமைக்கவும், கட்டவும் வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.வினர் கைது

கோவை : கோவையில் உருவாகி கேரளா செல்லும் மஞ்சிப்பள்ளம் ஆற்றின் உடைந்த தடுப்பணை சரி செய்ய வலியுறுத்தியும், புதிய தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினரை போலிசார் கைது செய்தனர்.

கோவை : கோவையில் உருவாகி கேரளா செல்லும் மஞ்சிப்பள்ளம் ஆற்றின் உடைந்த தடுப்பணை சரி செய்ய வலியுறுத்தியும், புதிய தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினரை போலிசார் கைது செய்தனர்.

கோவை அறிவொளிநகர் பகுதியில் உருவாகும் மஞ்சிப்பள்ளம் ஆறு குரும்பபாளையம்,மதுக்கரை, வேலந்தாவலம் வழியாக கேரளா செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே குரும்பபாளையம் பகுதியில் மட்டும் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், அண்மையில் பெய்த மழை முற்றிலுமாக கேரளா சென்றது. எனவே, உடனடியாக உடைந்த தடுப்பணையை சரி செய்ய வேண்டும் கூடுதலாக தடுப்பணைகளை கட்ட வேண்டும், தண்ணீரை சேமிக்க வழி வகைகள் வேண்டும் என வலியுறுத்தி மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மதிமுகவினர் குரும்பபாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தடுப்பணையில் இருந்து பொதுப்பணித்துறை அலுவலகம் வரை நடைபயணமாக சென்று மனு கொடுக்க முயன்றனர். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...