கோவை : மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்து வரும் சீரான மழையினால் கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர் இருப்பு நிலையாக உள்ளது.
கோவை : மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்து வரும் சீரான மழையினால் கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர் இருப்பு நிலையாக உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், கோவை முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தது. தற்போது, கோவை மாநகரில் மழையின் தாக்கம் சற்று ஓய்ந்திருந்தாலும், கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் சீரான மழை பெய்து வந்தது. இதனால், மொத்தம் 49.43 அடியைக் கொண்ட சிறுவாணி அணை, தற்போது 41.13 அடியில் உள்ளது. அதில் இருந்து நாளொன்றுக்கு 53 மி.லி. தண்ணீர் குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் மொத்தம் 65 மி.மீ. மழை பதிவாகியது.