கோவை துடியலூரில் கார், இருசக்கர வாகனம், தனியார் பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி – ஒருவர் படுகாயம்


கோவை துடியலூர் அருகே அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீதி மோதி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.



கோவை துடியலூரை அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு அருகே தனியார் நிறுவனத்தில் பணி முடிந்து கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது பின்னால் கோவை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருந்த மாருதி சிப்ட் கார் மோதியது. இதில் இருசக்கரவாகனத்தில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இருசக்கர வாகனத்தின் மீதூ மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பினை தாண்டி எதிர் சாலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது நேருக்கு நேர் பயங்கமாக மோதியது. இதில் கார் பேருந்தின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொருங்கியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் இருந்த பொதுமக்கள் காரில் இருந்து மீட்டனர். 

இதில் சம்பவ இட்த்திலேயே காரில் பயணம் செய்த 3 பேரும்பலி மணிகண்டன் 22 - கவுண்டம்பாளையம், அஸ்கர் அலி 22 - சிவாநந்தாகாலனி, முகம்மது சாகிப் 22 - கவுண்டம்பாளையம் ஆகியோர் பரிதாபமாக பலியாயினர். மேலும் படுகாயமடைந்த  இருசக்கர வாகன ஓட்டி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து துடியலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் பொதுமக்களில் பலபேர் மீட்ட்பு பணியில் ஈடுபட்டாலும் பெரும்பாலோனர் தங்களது செல்போன்களில் படம் எடுப்பதிலேயே மும்முறமாக இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...