தமிழகம் முழுவதும் நாளை 2-ம் நிலை காவலருக்கான தேர்வு : திருப்பூர் தேர்வு மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த காவல் அதிகாரிகள்

திருப்பூர் : தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், திருப்பூரில் உள்ள தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் : தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், திருப்பூரில் உள்ள தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதில், திருப்பூரில் மட்டும் தேர்வெழுத 3,782 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு 11.30 மணிக்கு முடிவடைகிறது. திருப்பூரில் ஜெய்வாய்பாய் பெண்கள் பள்ளி, குமரன் பெண்கள் கல்லூரி ஆகிய இரு இடங்களில் நடைபெற உள்ளது.



இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உள்ள காவலர் தேர்வு மையங்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார், மாவட்ட கண்காணிப்பாளர் நிக்ஷா மிட்டல், உதவி ஆணையர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பின்னர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் மாநகர ஆணையர் சஞ்சய் குமார் பேசுகையில், "நாளை நடைபெற உள்ள காவலர்களுக்கான தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...