நீலகிரி : தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ பயிற்சி முகாம்கள் மற்றும் மலை ரயில்களில் முழு சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இதில், நீலகிரி மாவட்டத்தில் முக்கிய ராணுவ பகுதியான மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் மற்றும் ராணுவ பகுதிகளில் துப்பாக்கிய ஏந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிவிரைவு படை போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முழு சோதனைக்குப் பிறகு தான் ராணுவ பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
இதேபோன்று, மலை ரயில் நிலையங்களில் சுற்றுலாப் பயணிகள் முழு சோதனைக்குப் பிறகு மலை ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். காவல் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி மற்றும் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் ஆகியோர் அவ்வப்போது நீலகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நிலவரங்களைக் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்குவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.