மேட்டுப்பாளையத்தில் பிளாக் கமெண்டோ அதிவிரைவு படை குவிப்பு : பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு

கோவை : பயங்கரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்டுள்ள பிளாக் கமெண்டோ அதிவிரைவு படையினர், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

கோவை : பயங்கரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்டுள்ள பிளாக் கமெண்டோ அதிவிரைவு படையினர், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

தீவிரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சீர்குலைக்கும் வகையில், நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



மேலும், சுற்றுலா தளமான உதகையின் நுழைவு வாயிலாகவும், கேரளாவின் எல்லையோர மலைப்பகுதிகளைக் கொண்ட மேட்டுப்பாளையத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி தலைமையில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஆற்றுப்பாலம் அருகே வாகன சோதனைச் சாவடி அமைத்து தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களும் 24 மணி நேரமும் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பாதுகாப்பிற்காக பிளாக் கமெண்டோ என்ற சிறப்பு அதிவிரைவு படையினர் இன்று மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்டுளனர். நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய கமெண்டோ படை வீரர்கள் இன்று அணிவகுப்பு நடத்தினர். பவானி ஆற்றுப் பாலம் சோதனைச் சாவடியில் இருந்து துவங்கிய இந்த அணி வகுப்பானது, உதகை - மேட்டுப்பாளையம் சாலையின் வழியே வந்து பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. 



மேலும், பேருந்து நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் சிறப்பு காவல் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். காவல் சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...