தீவிரவாதிகளின் புகைப்படம், வாகன எண் பற்றிய தகவல்கள் அனைத்தும் வதந்தி : கோவை மாநகர ஆணையர்

கோவை : தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளின் புகைப்படம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வாகன எண்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் பொய்யானவை என கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.



கோவை : தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளின் புகைப்படம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வாகன எண்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் பொய்யானவை என கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படங்கள் வெளியானது. மேலும், TN 70 A7779 (இனோவா), TN 02 Q7756 (ஸ்விஃப்ட்) , TN 99 Q 5260 (சைலோ) ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்களை தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன.



இந்த நிலையில், தீவிரவாதிகள் என்று சந்தேகிப்போரின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வாகன எண்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் தவறான தகவல்கள் என கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் விளக்கம் அளித்துள்ளார். மேலும், உண்மைக்கு மாறான இதுபோன்ற தவறான செய்திகளை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்றும், பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...