கோவை : தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளின் புகைப்படம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வாகன எண்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் பொய்யானவை என கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளின் புகைப்படம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வாகன எண்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் பொய்யானவை என கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படங்கள் வெளியானது. மேலும், TN 70 A7779 (இனோவா), TN 02 Q7756 (ஸ்விஃப்ட்) , TN 99 Q 5260 (சைலோ) ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்களை தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன.

இந்த நிலையில், தீவிரவாதிகள் என்று சந்தேகிப்போரின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வாகன எண்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் தவறான தகவல்கள் என கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் விளக்கம் அளித்துள்ளார். மேலும், உண்மைக்கு மாறான இதுபோன்ற தவறான செய்திகளை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்றும், பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.