திருப்பூர் : நிலுவை ஊதியத் தொகையை உடனே வழங்கக் கோரி நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் 28-ம் தேதி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்களும், தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கடன் தொகையை காரணம் காட்டி கடந்த 7 மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள தொகையை வழங்காமல் இருந்து வருகிறது பி.எஸ்.என்.எல். நிர்வாகம். இதை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றும் போக்கை கண்டித்தும், வரும் 28-ம் தேதி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.