நீலகிரியில் பெய்த கனமழையால் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாதித்ததன் எதிரொலி : விதை கிழங்குகள் விற்பனை மந்தத்தால் வியாபாரிகள் கவலை

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையில் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, விதை கிழங்குகள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையில் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, விதை கிழங்குகள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில் வெள்ளத்தால் சூழ்ந்து பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், கிழங்கு, முள்ளங்கி உள்ளிட்ட மேலும் பல மலைகாய்கறிகள் முற்றிலும் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். மழை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்ட விவசாய நிலங்களில் தற்போது நீர் வடிய தொடங்கி பின்னர், மீண்டும் விவசாயப் பணிகள் செய்ய விவசாயிகள் தயாராகியுள்ளனர் இந்த நிலையில், அதிக பயிரிடப்படும் விதை கிழங்கின் விற்பனை உதகை நகரில் உள்ள மண்டிகளில் மந்தமாக காணப்படுகிறது.



பஞ்சாப், கோலாறு, நைனிட்டால் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் விதை கிழங்குகள், உதகையிலுள்ள மண்டிகளில் மழைக்கு முன் கிலோ ரூ. 30-லிருந்து ரூ. 35 வரை விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ. 20 லிருந்து ரூ. 25 வரை விற்பனையாகிறது. அதேபோல, ஒரு மூட்டை மழைக்கு முன் ரூ. 1,000-லிருந்து ரூ. 1,100 வரை விற்பனையாகிய விதை கிழங்குகள், தற்போது ரூ. 700 முதல் ரூ. 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இவற்றை வாங்கிச் செல்ல விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

ஏற்கனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை மற்றும் உரத்தினை ஒரு போகத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது விதை கிழங்குகளின் விற்பனையும் மந்தமாக இருப்பதால் விற்பனையாளர்களும் நேரிடையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...