அருவங்காடு வெடிமருந்து தொழற்சாலையை தனியார் வசம் ஒப்படைப்பதை எதிர்த்து 2-வது நாளாக போராட்டம் : அதிகாரிகள் பணிக்கு செல்ல முயன்றதால் சலசலப்பு

நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் 2-வது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், ஒரு சில அதிகாரிகள் பணிக்கு செல்ல முற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் 2-வது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், ஒரு சில அதிகாரிகள் பணிக்கு செல்ல முற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 

குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளிட்ட 41 தளவாடப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, குன்னூரில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் குடும்பத்துடன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.



அதன்படி, நேற்று காலை முதல் ஒரு மாதம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் சி.எப்.எல்.யு., டி.எப்.எல்.யு., என்.இ.யு. மற்றும் சி.டி.ஆர்.ஏ., தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், 2-வது நாளாக இந்தப் போராட்டம் இன்று நடந்தது. அப்போது, அதிகாரிகள் சிலர் பணிக்கு செல்ல முயன்றதால் தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் மீண்டும் திரும்பி சென்றனர். இந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தளவாடப் பொருட்கள் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...