கோவையில் 12 பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு உதவிய எல்&டி நிறுவனம்

கோவை : இந்தியாவின் முன்னணி பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான பல்துறை குழும நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ, கோவையில் உள்ள 12 அரசு பள்ளிகளில் மாணவர்கள் கற்கும் சூழலை மேம்படுத்தும் நோக்கில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.

கோவை : இந்தியாவின் முன்னணி பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான பல்துறை குழும நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ, கோவையில் உள்ள 12 அரசு பள்ளிகளில் மாணவர்கள் கற்கும் சூழலை மேம்படுத்தும் நோக்கில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.

கோவை அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் தலைவர் திரு கே.ராஜாமணி, எல் அண்டு டி உருவாக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி. சி. ஆறுக்குட்டி முன்னிலையில் மாநில கல்வித் துறையிடம் முறைப்படி ஒப்படைத்தார். இவ்விழாவில், கல்வித் துறையின் அதிகாரிகள், அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பி.டி.ஏ மற்றும் எல் அண்டு டி நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

லார்சன் அண்டு டுப்ரோ, முழு அர்ப்பணிப்புடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வரும் ஒரு பெருநிறுவனமாக இருப்பதால், கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக நல நோக்கங்களை ஆதரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, இந்தியா முழுவதும் பல இடங்களில் நீண்டகாலம் தொடரும் முன்மாதிரி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் கீழ், எல் அண்டு டி நிறுவனம் குடிநீர் வசதி, புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகள், கை கழுவும் வசதிகளை அசோகபுரம், வெள்ளலூர், பிச்சனூர், செட்டிப்பாளையம், அறிவொளிநகர், குமிட்டிபதி, குரும்பப்பாளையம் மற்றும் ஆனைக்கட்டி ஆகிய எட்டு அரசுப் பள்ளிகளில் உருவாக்கியுள்ளது.

மேலும், மலுமிச்சம்பட்டி, பிச்சனூர், வெள்ளலூர் மற்றும் ஆனைகட்டி ஆகிய நான்கு இடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் மினி - அறிவியல் மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெள்ளலூர் அரசு பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றுச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றுடன் நான்கு அரசுப்பள்ளியில் (அசோகபுரம், வெள்ளாளப்பாளையம், மைலேரிபாளையம் அண்டு ஆனைகட்டி) வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனைகட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தை புதுப்பித்திருக்கிறது எல் அண்டு டி..

விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், இயற்கையை ஊக்குவிக்கும் வகையில் காடுகளை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ’மியாவாகி’ முறையைப் பின்பற்றி, அசோகபுரம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர். கோயம்புத்தூரில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதல் முறையாக இது போன்ற முயற்சி எல் அண்டு டி நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எல் அண்டு டி, கல்வித் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இணைந்து கோவையில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை இந்த நிதியாண்டிலேயே கட்டமைப்பதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...