வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சர்க்கார்பதி மலைகிராம மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : சர்க்கார்பதி சென்டில்மென்ட்‌ கிராமத்தில்‌ பெய்த தென்மேற்குப்‌ பருவமழையின்‌ காரணமாக வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி வழங்கினார்‌.

கோவை : சர்க்கார்பதி சென்டில்மென்ட்‌ கிராமத்தில்‌ பெய்த தென்மேற்குப்‌ பருவமழையின்‌ காரணமாக வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி வழங்கினார்‌.



கோவை‌ மாவட்டம்‌, சர்க்கார்பதி சென்டில்மென்ட்‌ கிராமத்தில்‌ பெய்த தென்மேற்குப்‌ பருவமழையின்‌ காரணமாக வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட 22 பயனாளிகளுக்கு இன்று ரூ. 5,000 மதிப்பிலான அரிசி, பருப்பு, சர்க்கரை, பால்‌ உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும்‌, மேலும்‌, மழை வெள்ளத்தால்‌ உயிரிழந்த ஒரு குழந்தையின்‌ குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்‌ மதிப்பிலான காசோலையையும்‌ அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி வழங்கினார்‌. இந்நிகழ்ச்சியில்‌, சட்டப்பேரவைத்‌ துணைத்தலைவர்‌ பொள்ளாச்சி.வி.ஜெயராமன்‌‌, மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்‌ கஸ்தூரிவாசு, வருவாய்‌ கோட்டாட்சியர்‌ ரவிக்குமார்‌, கண்காணிப் பொறியாளர்‌ முத்துசாமி, உதவி பொறியாளர்‌ லீலா உட்பட அரசு அலுவலர்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

பின்னர்‌ அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- தொடர்ந்து பெய்த கனமழையின்போது, காண்டூர்‌ கால்வாய்‌(சமமட்ட கால்வாய்‌) 0 பாய்ண்ட்‌ எனும்‌ பகுதியில்‌ மலைகளில்‌ இருந்து கீழே விழுந்த மிகப்பெரிய பாறையானது கால்வாயின்‌ நடுவே குறுக்கே விழுந்ததனால்,‌ கால்வாயில்‌ சென்ற அதிக நீர்‌ வெளியேறி மிகப்பெரிய காற்றாட்டு வெள்ளம்‌ போல்‌ உருவானது.‌ இதனால், வேட்டைக்காரன்புதூர்‌ குரூப்‌, சேத்துமடை கிராமம்‌, சர்க்கார்பதி மின்முகாம்‌, நாகர்‌ ஊற்று-2 எனும்‌ மழைவாழ்‌ மக்கள்‌ வசித்து வரும்‌ செட்டில்மெண்ட்‌ பகுதியில்‌ வசிக்கும்‌ குடியிருப்பு பகுதிகளுக்கும்‌ வழிந்தேடி நிலச்சரிவு ஏற்பட்டது.



இந்நிகழ்வின்போது, சர்க்கார்பதி செட்டில்மென்ட்‌ பகுதியில்‌ உள்ள 22 வீடுகள்‌ அடித்துச்செல்லப்பட்டன, உடனடியாக வருவாய்துறை, காவல்துறை மற்றும்‌ தீயணைப்பு மற்றும்‌ மீட்புபணிகள்‌ துறையினர்‌ துரிதமாக செயல்பட்டு 60 நபர்களை சர்க்கார்பதி பின்முகாம்‌ குடியிருப்பு பகுதியிலும்‌, சர்க்கார்பதி மின்நிலையத்திலும்‌ பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்‌. அவர்களுக்கு உடனடியாக தேவையான உணவு, போர்வை மற்றும்‌ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்‌ உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும்‌, முதலமைச்சரின்‌ உத்தரவிற்கிணங்க, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்‌ பாதிக்கப்பட்ட மக்களை நேரில்‌ சென்று ஆறுதல்‌ கூறி மேலும்‌, பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 வீதம்‌, மொத்தம்‌ ரூ. 2,20,000 வழங்கப்பட்டதுடன்‌, 37 வகையான பொருட்கள்‌ வழங்கப்பட்டன. 

இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம்‌ தேர்வு செய்யப்பட்டு வீடுகள்‌ கட்டிதரவும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்,‌ என நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி‌ பேசினார்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...