கோவை : சர்க்கார்பதி சென்டில்மென்ட் கிராமத்தில் பெய்த தென்மேற்குப் பருவமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

கோவை மாவட்டம், சர்க்கார்பதி சென்டில்மென்ட் கிராமத்தில் பெய்த தென்மேற்குப் பருவமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 பயனாளிகளுக்கு இன்று ரூ. 5,000 மதிப்பிலான அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மேலும், மழை வெள்ளத்தால் உயிரிழந்த ஒரு குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான காசோலையையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், கண்காணிப் பொறியாளர் முத்துசாமி, உதவி பொறியாளர் லீலா உட்பட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- தொடர்ந்து பெய்த கனமழையின்போது, காண்டூர் கால்வாய்(சமமட்ட கால்வாய்) 0 பாய்ண்ட் எனும் பகுதியில் மலைகளில் இருந்து கீழே விழுந்த மிகப்பெரிய பாறையானது கால்வாயின் நடுவே குறுக்கே விழுந்ததனால், கால்வாயில் சென்ற அதிக நீர் வெளியேறி மிகப்பெரிய காற்றாட்டு வெள்ளம் போல் உருவானது. இதனால், வேட்டைக்காரன்புதூர் குரூப், சேத்துமடை கிராமம், சர்க்கார்பதி மின்முகாம், நாகர் ஊற்று-2 எனும் மழைவாழ் மக்கள் வசித்து வரும் செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் வழிந்தேடி நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்நிகழ்வின்போது, சர்க்கார்பதி செட்டில்மென்ட் பகுதியில் உள்ள 22 வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன, உடனடியாக வருவாய்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையினர் துரிதமாக செயல்பட்டு 60 நபர்களை சர்க்கார்பதி பின்முகாம் குடியிருப்பு பகுதியிலும், சர்க்கார்பதி மின்நிலையத்திலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக தேவையான உணவு, போர்வை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறி மேலும், பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 வீதம், மொத்தம் ரூ. 2,20,000 வழங்கப்பட்டதுடன், 37 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டிதரவும் நடவடிக்கை எடுக்கப்படும், என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.