திருப்பூரில் அரிசி கடையில் ரூ. 27 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 பென் டிரைவ்கள் கொள்ளை

திருப்பூர் : திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள அரிசி கடையில் மேற்கூரையை உடைத்து நூதன முறையில் பெண் வேடமிட்டு ரூ. 27 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 பென் டிரைவ்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருப்பூர் : திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள அரிசி கடையில் மேற்கூரையை உடைத்து நூதன முறையில் பெண் வேடமிட்டு ரூ. 27 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 பென் டிரைவ்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

எம்.எஸ். நகர் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் 10.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் கடையை திறந்த போது, மேற்கூரை உடைக்கப்பட்டதை கண்டு அதிச்சி அடைந்தார். பின்பு கடைக்குள் சென்று பார்த்தபோது, ரூ. 27 ஆயிரமும், 4 பென் டிரைவ்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதே போல், கடந்த 3 மாதத்திற்கு முன்பும் 2018-லும் இரண்டு முறை திருட்டு போனதாக கூறினார். மேலும், இந்த நூதன முறையில் திருடன் பெண் வேடமிட்டு இதுவரை திருட்டில் ஈடுபட்டது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. 



இதைத் தொடர்ந்து, மீண்டும் மீண்டும் தொடர் திருட்டு செய்து வரும் திருடனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தனர். வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...