கடைசி ஆடி வெள்ளியையொட்டி வள்ளி அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு வழிபாடு : 500க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

கோவை : ஆடி வெள்ளியையொட்டி கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.


கோவை : ஆடி வெள்ளியையொட்டி கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.



ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதும், அதிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசித்தால் எண்ணிய காரியம் ஈடேறும் என்பதும் ஐதீகம். இந்த நிலையில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரசித்தி பெற்ற கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி அம்மன் கோவிலில் 508 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. கோவை ஆலயம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அங்குள்ள மண்டபத்தில் விளக்குடன் வரிசையாக அமர்ந்திருந்த பெண்கள், அருள்மிகு வள்ளி அம்மனுக்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க  தாங்களும் அந்த மந்திரத்தை கூறி வழிபாடு நடத்தினர். 



கணபதி வழிபாட்டுடன் துவங்கிய நிகழ்ச்சியில் அம்மன் வழிபாடு, திருமாங்கல்ய வழிபாடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனை நினைத்து திருவிளக்கேற்றி வழிபட்டால் தொழில் விருத்தி, குடும்ப அமைதி மற்றும் செல்வ செழிப்பு உருவாகும் என நம்பப்படுவதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...