வெள்ளலூர் குப்பை கிடங்கை தத்தெடுத்த ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் மற்றும் சிறுதுளி அமைப்பு

கோவை : 73-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களும், சிறுதுளி அமைப்பும் இணைந்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கைத் தத்தெடுத்து அப்பகுதியில் தூய்மைப் பணியும் மரக்கன்றுகளைப் பராமரித்தல் மற்றும் புதிய மரக்கன்றுகளை நடுதல் ஆகியவற்றைச் செய்யும் துவக்க விழா நடைபெற்றது.

கோவை : 73-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களும், சிறுதுளி அமைப்பும் இணைந்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கைத் தத்தெடுத்து அப்பகுதியில் தூய்மைப் பணியும் மரக்கன்றுகளைப் பராமரித்தல் மற்றும் புதிய மரக்கன்றுகளை நடுதல் ஆகியவற்றைச் செய்யும் துவக்க விழா நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி சுவாதிரோகித் மற்றும் எஸ்.என்.ஆர். அறநிலையத்தின் சி.ஓ.ஓ. வி. இராமகிருஷ்ணன் மற்றும் என்.ஆர். அறநிலையத்தின் சி.இ.ஓ. இராம்குமார், சிறுதுளி அமைப்பின் திட்ட இயக்குனர் சரவணன் மற்றும் சிறுதுளி அமைப்பினர் மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.ஆர். அலமேலு மங்கை வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் பி.ஆர்.எம். பிரகதீஸ்வரன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 700 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளையும், பராமரிப்புப் பணிகளையும் செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...