திருப்பூர் : திருப்பூரில் 62 மாணவர்கள் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியத்தோடு சேர்ந்து கோலாட்டமும் ஆடி 3 வகையான பின்னல்களை செய்து ஏசியா புக் ரெக்கார்டு சாதனை நிகழ்த்தினர்.

திருப்பூரில் தனியார் நடனப்பள்ளி சார்பில் திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடனக்கலை மூலம் ஏசியா புக் ரெக்கார்டில் பெயர் பெற முயற்சி மேற்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இம்முயற்சியில் 62 மாணவிகள் இணைந்து சுமார் 40 நிமிடங்கள் பரதநாட்டியத்தோடு கூடிய கோலாட்டம் ஆடி உரி, வங்கி மற்றும் தேர்ப்பின்னல் ஆகிவற்றை செய்து காண்பித்தனர். இதற்கு முன்னர் இவர்கள் 40 மாணவிகளைக் கொண்டு 20 நிமிடங்கள் செய்த சாதனையே வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டில் இருந்து வந்தது. தற்போது, அந்த சாதனையை முறியடித்து ஏசியா புக் ரெக்கார்டில் பெயர்பெற்றுள்ளனர். இச்சாதனைக்கான சான்றிதழ் ஏசியா புக் ரெக்கார்டு அமைப்பின் நிர்வாகிகளால் மாணவிகளிடம் வழங்கப்பட்டது.