கோவை : கோவையில் கொண்டாடப்பட்ட 73-வது சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் காண்போரை கவரும் வண்ணம் அமைந்தது.

73-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதன் பின்னர், நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், விளாங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களின் கோலாட்டம், விளாங்குறிச்சி ஆர்.ஜே. மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடல், லட்சுஷ்மி நாயக்கன் பாளையம் எஸ்.ஆர்.என்.வி மாணவர்களின் ஒயிலாட்டம், கிணத்துக்கடவு மேல்நிலை பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடல் என அசத்தினர்.

மேலும், குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களின் சிலம்பம், துணி வணிகர் சங்க பள்ளி மாணவர்களின் கிராமிய பாடல், வரதராஜபுரம் என்.ஜி.ஆர் பள்ளி மாணவர்களின் பிரமிட், சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலை பள்ளியின் ஐ லவ் இந்தியா பாடல், தெலுங்குபாளையம் வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்களின் தப்பாட்டம், கரகம் என மொத்தம் 1,160 பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களது கலை நிகழ்ச்சியை அங்கிருந்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் ரசித்தனர்.