கோவையில் மருத்துவ ஆணையத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

கோவை : இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வரும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.


கோவை : இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வரும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.



இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வை முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக (நெக்ஸ்ட்) தேசிய அளவில் நடத்த இந்த மசோதா வழிசெய்கிறது. எனவே, இந்த மசோதாவுக்கு மருத்துவத் துறையில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் இன்று காலை மருத்துவமனையின் வளாகத்தில் அமர்ந்து மருத்துவ ஆணையத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தினர். மருத்துவக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதை கண்டித்தும், வரைவு தேசிய கொள்கை 2019ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும், நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகளை ஏந்தியபடி தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.



இதைத் தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு முன்சென்று தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும் இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது :- தேசிய மருத்துவ ஆணையத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்தக் கூடாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019-ஐ திரும்பப் பெற வேண்டும். போலி மருத்துவர்கள் வளர அரசே துணை நிற்க கூடாது. இதனால், பல உயிரிழப்புகள் ஏற்படும். ஆகவே, எங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களை நடத்தி வருகிறோம், என தெரிவித்தார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...