பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா

கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 10,000 மரக்கன்றுகளை அனுப்பும் நிகழ்ச்சி பி.எஸ்.ஜி சர்வஜனா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 10,000 மரக்கன்றுகளை அனுப்பும் நிகழ்ச்சி பி.எஸ்.ஜி சர்வஜனா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு வனத்துறை, இயற்கை தன்னார்வ அமைப்பு மற்றும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள சர்வஜனா பள்ளி ஆகியவை ஒன்றிணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்ய விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் அனுப்பும் நிகழ்ச்சி இன்று பி.எஸ்.ஜி. சர்வஜனா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, 'ஒரு விதை புரட்சி' என்பதை மையமாகக் கொண்ட இந்த நிகழ்வில், ஒரு விதை புரட்சி என்ற எழுத்து வடிவத்தில் மரக்கன்றுகளுடன் சுமார் 4,000 பள்ளி மாணவர்கள் பங்கேற்று நின்ற காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



இந்த நிகழ்ச்சியில் மெஹந்தி சர்கஸ் திரைப்படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், மரம் வளர்ப்பு குறித்தும், மரத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாணவ, மாணவிகளிடம் உரையாடினார். தொடர்ந்து, மாணவர்கள் கையில் வைத்திருந்த 4,000 ஆயிரம் மரக்கன்றுகள் உட்பட 10 ஆயிரம் மரக்கன்றுகளை வேதாரண்யம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெஹந்தி சர்க்கஸ் திரைப்பட கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் கூறுகையில், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தன்னுடைய பள்ளி நாட்களை திரும்பிப் பார்க்கும் நிகழ்வாக இது அமைந்தது. வரும் காலங்களில் தன்னால் ஆன உதவிகளை செய்வேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்," எனக் கூறினார்.



மேலும், மெஹந்தி சர்க்கஸ் படம் வெற்றியை அடுத்து வேறு படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, இரண்டாவதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். விரைவில் அதற்கான தகவல் வெளியிடப்படும், என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...