கோழிக்கோடு : வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் கோழிக்கோடு பகுதியில் பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையையும், அதன் பெற்றோரையும் மீட்ட கோவையின் டெல்டா குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோழிக்கோடு : வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் கோழிக்கோடு பகுதியில் பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையையும், அதன் பெற்றோரையும் மீட்ட கோவையின் டெல்டா குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு வடக்குகேரளாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த புதுமலை, கவளப்பாறை ஆகிய 2 கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கி புதைந்து போனது. இதுவரை அங்கு 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கேரளாவில் கோவையைச் சேர்ந்த டெல்டா குழுவினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கோழிக்கோட்டின் சேருப்பா பகுதியில் கடந்த 10-ம் தேதி இறுதிகட்ட மீட்பு பணிகள் நடைபெற்றது. அப்போது, பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை உடல் முழுவதும் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக நீரில் நனைந்தவாறு வெள்ளத்தில் சிக்கித் தவித்து வந்தது. இதையறிந்த டெல்டா குழுவினர் பெரும் போராட்டத்திற்கு பிறகு குழந்தையையும், பெற்றோரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர், அவர்களுக்கு ரெயின் கோர்ட் அளித்து, சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள முகாமிற்கு படகில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே, பச்சிளம் குழந்தையையும், அதன் பெற்றோரையும் காப்பாற்றிய டெல்டா குழுவினருக்கு அங்குள்ள பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.