சூலூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

கோவை : சூலூர்‌ அருகே உள்ள மலைப்பாளையம்‌ கிராமத்தில்‌ பணம்‌ வைத்து வெட்டாட்டம்‌ எனும்‌ சூதாட்டத்தில்‌ ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து சிறையில்‌ அடைத்தனர்.

கோவை : சூலூர்‌ அருகே உள்ள மலைப்பாளையம்‌ கிராமத்தில்‌ பணம்‌ வைத்து வெட்டாட்டம்‌ எனும்‌ சூதாட்டத்தில்‌ ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து சிறையில்‌ அடைத்தனர்.

கோவை மாவட்டம்‌ சுல்தான்பேட்டை காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பாளையம்‌ கிராமத்தில்‌ பெரியசாமி என்பவரது வீட்டின்‌ பின்புறம்‌ தமிழக அரசால்‌ தடை செய்யப்பட்ட வெட்டாட்டம்‌ எனும்‌ சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்க தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ சுஜித்குமாரின் உத்தரவின்படி, சுல்தான்பேட்டை காவல்‌நிலைய உதவி ஆய்வாளர்‌ கணேசமூர்த்தி மற்றும் போலீசார், திடீர் சோதனை நடத்தினர்.

‌அதில், மலைப்பாளையத்தைச்‌ சேர்ந்த பெரியசாமி (52), ராஜன்‌ (31), ஆண்டிச்சாமி (38), ஆண்டிபாளையத்தைச்‌ சேர்ந்த சுப்பிரமணி (38), மயில்சாமி (38), சக்திவேல் ‌(39), காமநாயக்கண்‌பாளையத்தைச்‌ சேர்ந்த அப்பாஸ் ‌(25), ராஜா (41), இமென்றாம்பாளையம்‌ பவுல்ராஜ் ‌(45), நாராயணபுரம்‌ கோபாலகிருஷ்ணன்‌ (37), ஓடக்கல்பாளையம்‌ நவநீதன்‌ (39) மற்றும்‌ மானசிபாளையம்‌ ரத்தினமூர்த்தி (29) உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ. 20,800-ஐ கைப்பற்றி சுல்தான்பேட்டை காவல்‌நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு‌ கோவை மத்திய சிறையில்‌ அடைக்கப்பட்டனர்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...