கோவை : சூலூர் அருகே உள்ள மலைப்பாளையம் கிராமத்தில் பணம் வைத்து வெட்டாட்டம் எனும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவரது வீட்டின் பின்புறம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெட்டாட்டம் எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்க தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரின் உத்தரவின்படி, சுல்தான்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார், திடீர் சோதனை நடத்தினர்.
அதில், மலைப்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி (52), ராஜன் (31), ஆண்டிச்சாமி (38), ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (38), மயில்சாமி (38), சக்திவேல் (39), காமநாயக்கண்பாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ் (25), ராஜா (41), இமென்றாம்பாளையம் பவுல்ராஜ் (45), நாராயணபுரம் கோபாலகிருஷ்ணன் (37), ஓடக்கல்பாளையம் நவநீதன் (39) மற்றும் மானசிபாளையம் ரத்தினமூர்த்தி (29) உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ. 20,800-ஐ கைப்பற்றி சுல்தான்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.