கனமழையினால் நிரம்பி வழியும் வெள்ளலூர் குளம் : மலர்கள், நவதானியங்களை தூவி இயற்கை அன்னைக்கு நன்றி கூறிய தன்னார்வலர்கள்

கோவை : கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வெள்ளலூர் குளம் நிரம்பி வழிந்து வரும் நிலையில், மலர்கள் மற்றும் நவதானியங்கள் தூவி இயற்கை அன்னைக்கு தன்னார்வலர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.

கோவை : கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வெள்ளலூர் குளம் நிரம்பி வழிந்து வரும் நிலையில், மலர்கள் மற்றும் நவதானியங்கள் தூவி இயற்கை அன்னைக்கு தன்னார்வலர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.



கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நொய்யல் ஆற்றின் நீர் வழித்தடங்களில் உள்ள குளங்கள், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் ஒரு பகுதியாக, வெள்ளலூர் குளமும் நிரம்பியது. இந்த நிலையில், குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் வெள்ளலூர் குளக்கரையில் 131-வது வார தொடர் களப்பணி நேற்று நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 



அப்போது, வெள்ளலூர் குளக்கரையில் இயற்கை அன்னைக்கு நன்றி கூறும் வகையில் மலர்கள் மற்றும் நவதானியங்கள் தூவி நன்றி கூறப்பட்டது. 



மேலும், மியாவாக்கி அடர் வனத்தில் பராமரிப்பு பணியும் மரக்கன்றுகள் நடும் களப்பணியும் நடைபெற்றது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...