நீலகிரி : நீலகிரி மலை ரயில் தனியார் மயமாக்கப்படமாட்டாது என மத்திய ரயில்வே துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வருகை தந்த மத்திய ரயில்வேத் துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் இது தொடர்பாக பேசியதாவது :- ரயில்வேயில் திறமையான ஆட்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களைக் கொண்டு மலை ரயில் சேவை நன்றாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால், தனியார்மயம் ஆக்கப்பட வாய்ப்பு இல்லை. மேலும், 120 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளதுமான இந்த மலை ரயில் ஆசியாவிலேயே குன்னூரில் தான் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பல நாடுகளில் குறிப்பாக ஜப்பான், இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. நம் நாட்டில் மலை ரயில் சேவை இயக்கப்படுவது பெருமைக்குரிய விஷயம், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையிலான புனரமைக்கப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் திறந்து வைத்தார்.

பின்னர், குன்னூர் ரயில்நிலையத்தில் தென்னக ரயில்வே நிர்வாகமும், மத்திய தபால் துறையும் இணைந்து அறிமுகம் செய்த நீலகிரி மலை ரயில் குறித்த தபால் தலையை மத்திய ரயில்வே துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் மற்றும் மேற்கு தபால் துறை இயக்குநர் சீலிபர்மன் ஆகியோர் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ், முதன்மை கோட்ட பொறியாளர் ஹரிகிருஷ்ணன், குன்னூர் ரயில்வே நிலைய மேலாளர் பிரதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.