கோவை : சிறுவாணி அணை இன்னும் அதன் கொள்ளளவை எட்டாத நிலையில், அணை நிறைந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது போன்ற போலியான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பி வருகிறது.

இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த சிலர், சிறுவாணி அணையின் நீர் பாய்ந்தோடும் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவதாக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
நீலகிரி, சீன மற்றும் வேறு இரு பகுதிகளில் உள்ள அணைகளின் காட்சிகளை, சிறுவாணி அணை மற்றும் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி எனப் பெயர் குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் பரவச் செய்துள்ளனர். நீர்நிலைகளின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக இதுபோன்ற போலியான வீடியோக்களை வீணாகப் பரவச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.