திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை மற்றும் ரொக்கம் கொள்ளை : போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஐஸ்கடை மூன்றாவது விதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சிங்கர் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாண்டியன் நேற்று குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, இன்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில், பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 



இது குறித்து அவிநாசி போலீசாருக்கு புகார் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...